25 தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை: பிரதமர் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்
தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உப குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (09.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
தொழிற்கல்வித் துறையில் புதிய கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் மாணவர்களுக்குப் புதிய தொழில்சார் பாதைகளைத் திறந்துவிடுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்
இந்த கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கலந்துரையாடல்கள்
- உள்கட்டமைப்பு மேம்பாடு: குறித்த 25 கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைத் தரமுயர்த்துவதற்கான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துதல்.
- கல்வி வாய்ப்புகள் விரிவாக்கம்: தற்போதைய சந்தைத் தேவைக்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்வியில் புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தல்.
- முன்னோடித் திட்டம்: இந்த 25 கல்லூரிகளையும் சிறந்த தொழிற்கல்வி நிலையங்களாக மாற்றுவதற்கான முன்னோடித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்! சிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள விசாரணைகள் - களமிங்கியுள்ள முக்கிய அதிகாரிகள்
இந்தக் கூட்டத்தில் துறைமுகங்கள், சிவில் விமானச் சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக, தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே ஆகியோருடன் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam