கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்
கொழும்பில் இருந்து அக்கரப்பத்தனை நோக்கி பயணித்த கெப்ரக ரக வாகனம் ஒன்று ஹட்டன் - போடைஸ் - டயகம வீதியில் கட்டுப்பாட்டை இழந்து நடுவீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(11.06.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
எனினும், விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துமாறு
இந்நிலையில் மத்திய மலைநாட்டு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வாகன விபத்துகளின் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மத்திய மலைநாட்டு பகுதிகளில் பயணிக்கும் சாரதிகள் வேகக்கட்டுப்பாட்டுடன், முகப்பு விளக்குகளை பயன்படுத்தி, பாதுகாப்பாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
