யாழ்.செம்மணியில் நடைபெறவுள்ள போராட்டம்: தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்ப்பாணம் அரியாலை - சிந்துபாத்தி புதைகுழி தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று கோரி நடைபெறவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் (C. V. K. Sivagnanam) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “யாழ்ப்பாணம் அரியாலை சிந்துபாத்தி புதைகுழி ஆய்வு தொடர்பாக உண்மை கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ''மக்கள் செயல்'' என்ற தன்னார்வ இளையோர் அமைப்பு ''அணையா விளக்கு'' மூன்று நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றது.
நீதி கோரி போராட்டம்
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் யாவரும் எதிர்வரும் 24.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09.30 முதல் நண்பகல் 1.30 மணி வரை கலந்து கொண்டு எமது கட்சியின் ஆதரவினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகையின் போது நாம் ஒற்றுமையாக இந்த கோரிக்கையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்திய இந்த கவனயீர்ப்பு மிக முக்கியமானது என்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றது.” என குறிப்பிட்பட்டுள்ளது.
மேலதிக தகவல்-ராகேஷ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
