செம்மணி போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு

Jaffna SL Protest Gnanamuththu Srineshan chemmani mass graves jaffna
By Kumar Jun 22, 2025 01:40 PM GMT
Report

செம்மணி புதைகுழி சர்வதேச கண்காணிப்பின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும், ஆய்வு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைவரும் இணைந்து வலு சேர்க்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் தேசிய பற்றாளர்கள் மட்டுமல்லாமல் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இந்த போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். 

தனக்கு பின் ஈரானின் அதியுச்ச தலைவர்களாக இருக்கக்கூடிய மூவரை பரிந்துரைந்த அலிகமேனி

தனக்கு பின் ஈரானின் அதியுச்ச தலைவர்களாக இருக்கக்கூடிய மூவரை பரிந்துரைந்த அலிகமேனி

கையறு நிலையில் அரசுகள்

மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நீதிகோரி இளையோரினால் நமக்காக முன்னெடுக்கப்படும் இந்த அணையா விளக்கு போராட்டத்திற்கு அனையாமல், ஒதுங்காமல் அனைவரையும் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விடயங்களோ, படுகொலை செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் தொடர்பான விடயங்களோ வெளியில் கொண்டுவரமுடியாத கையறு நிலையில் அரசுகள் காணப்படுகின்றன.

இது தொடர்பான விசாரணைகள் சர்வதேச ரீதியில் நடைபெற்றால்தான் உண்மைகள் வெளியில் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படும் மனித புதைகுழி அகழ்வின்போது 19 எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்டதில் மூன்று குழந்தைகளின் எழும்புக் கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான புதைகுழிகள் அமைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

செம்மணி போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு | Chemmani Mass Graves  

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையென்றது தொடர் கதையாவுள்ளது. தமிழர்கள் வயது வேறுபாடுகள் இல்லாமல்  கொல்லப்பட்டு புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றபோது இதனையே நாங்கள் இனப்படுகொலை என்கின்றோம்.

இதனடிப்படையில் தற்போது இளம் தலைமுறையினைக் கொண்ட அமைப்பானது இந்த விடயத்தினை சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு வரவேண்டும், மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் செம்மணி வளைவு உள்ள பகுதியில் எதிர்வரும் 23,24,25ஆம் திகதிகளில் அணையாத தீபம் என்ற கருப்பொருளில் செயற்பாட்டினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.

இது மனித உரிமை மீறலோடு சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையாகும். இப்படியான பிரச்சினைகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு தீர்வைக் காணவேண்டும், சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், சர்வதேசத்தின் மேற்பார்வையின் கீழ் இந்தப் புதைகுழிகள் அகழப்படும்போதுதான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என்ற அடிப்படையில் மக்கள் செயல் எனச்சொல்லப்படுகின்ற இளையோர் தன்னார்வ அமைப்பானது 23,24,25ஆம் திகதிகளில் போராட்டத்தினை மேற்கொள்ளவிருக்கின்றார்கள்.

செம்மணி போராட்டத்திற்கு மீண்டும் அழைப்பு | Chemmani Mass Graves

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை உள்ளடக்கிய தமிழ் சமூகம், தமிழ் பேசும் சமூகம், பாதிக்கப்பட்டவர்கள் எமது தமிழரசுக் கட்சி சார்ந்தவர்கள் ஆதரவாளர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் இந்த ஜனநாயக ரீதியான மனிதவுரிமைப் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும்.

அணையாத தீபம் என்ற இந்தப் போராட்டமானது எங்களுடைய விடுதலைத் தாகம் அணையாமல் இருந்துகொண்டிருக்கின்றது, மனிதவுரிமை சம்பந்தமான விடயங்களில் நீதி தேடுகின்ற விடயமும் அணையாத தீபமாக எங்களுடைய மனங்களில் இருக்கின்றது என்ற அடிப்படையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

மனிதவுரிமைபேரவையின் ஆணையாளர் வோல்கர் டக்கர் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். பல தடுப்புகளுக்கு மத்தியில் அவர் இங்கு வரவிருக்கின்றார்.

அந்த வேளையில் இப்படியான மனிதவுரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்காத விடயங்கள் சம்பந்தமாக போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய செயற்பாடுகள் இருக்கின்றபோது வடக்கு கிழக்கு என்றில்லாமல் பாதிக்கப்பட்ட உறவுகள், மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..

ஈரானை தாக்கிய அமெரிக்கா! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்..

அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் : எச்சரிக்கும் ஈரான்

அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் : எச்சரிக்கும் ஈரான்

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US