பெருந்தோட்ட மக்களை அவதூறாக பேசியவரை நடு வீதியில் மண்டியிட வைத்த மக்கள் (Video)
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வர்த்தகர் ஒரு பெருந்தோட்ட மக்கள் தொடர்பாக தனது பதிவுக்கு நகர மத்தியில் வைத்து மக்களின் வணங்கி மன்னிப்பு கோரியுள்ளார்.
பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அவதூறான தகவல்களை இவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
“பெருந்தோட்ட மக்களின் கல்வி நிலைமை, பொருளாதார நிலைமை , அறிவுத் திறன் ஆகியன மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக” அவர் இட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
அத்தோடு, குறித்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிக்கோயா நகர வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சம்பவ இடத்தில் பெருமளவான பொது மக்கள் திரண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததோடு பொது வெளியில் அவரை மக்களிடம் மன்னிப்பு கோருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த நிலையில், தான் செய்த தவறை ஒப்புக் கொள்வதாகவும், சகல பெருந்தோட்ட மக்களிடமும் தான் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்து கைக்கூப்பி வணங்கி பொதுமக்களிடத்தில் அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
