கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (7) விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
இதன்போது, கைது செய்யப்பட்டவர் கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
சந்தேக நபரான வர்த்தகர் துபாயிலிருந்து நேற்று காலை 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப்பொதிகளிலிருந்து 91 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட வர்த்தகரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (08) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri