கோர விபத்தில் சிக்கிய ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்து!
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற அரச பேருந்து ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகின.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் இன்று (25) காலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் நால்வருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்து இ.போ.ச பேருந்து எதிர்திசையில் வருவதை கண்டு பிரேக் அழுத்தியதில் தனியார் பேருந்தின் பின்பகுதி நழுவி அரச பேருந்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பேருந்தின் பின்புறம் இரண்டாகப் பிரிந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காணொளி - திருமால்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |