மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள் ஜனநாயகத்தின் பெயரால் புனரமைக்கப்பட வேண்டும்
அண்மையில் இடம்பெற்ற கலவரத்தினால் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களின் வீடுகள் அனைத்தும் ஜனநாயகத்தின் பெயரால் புனரமைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அழிக்கப்பட்ட ஒற்றை மாடி வீடுகளை இரண்டு மாடி வீடுகளாகவும், இரண்டு மாடி வீடுகளை மூன்று மாடி வீடுகளாகவும் மீண்டும் கட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளை கொல்வதும், அவர்களின் வீடுகளை எரிப்பதும் ஜனநாயகம் அல்ல என்றும் காட்டுமிராண்டித்தனமான எண்ணம் கொண்டவர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு பயந்து வாழ்வதை விட இறப்பதே மேல் எனவும் இல்லையெனில் எதிர்கால சந்ததியினர் அரசியலுக்கு வரமாட்டார்கள் எனவும் அது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.