மட்டக்களப்பில் வீடு உடைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளை
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பகுதியில் வீடு ஒன்றை உடைத்து 15 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
வாகன தரிப்பிடம் ஒன்றில் பொருட்களை திருடிச்சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர் உட்பட கஞ்சா போதை பொருள்களுடன் இருந்த 4 பேரை நேற்று (28.05.2024) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கல்லடி இசை நடன கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
இந்த நிலையில் யன்னல் கதவு ஒன்றை கழற்றி உள் நுழைந்த திருடன் அங்கிருந்த 15 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டை விசாரணைக்கு உட்படுத்தியபோதே பொலிஸார் சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஒரு பக்கம் சூட்டிங், அதே நேரத்தில் ICUவில் இறந்த கணவர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகையின் சோக கதை Cineulagam
ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி News Lankasri