சர்வதேச நாணயத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபயசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே இம்முறை வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அரச வருமானத்திலோ அல்லது மொத்தச் செலவிலோ எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
[H43TY8 ]
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதை இறுதி நடவடிக்கையாக மட்டுமே முன்னெடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், சர்வதேச நாணய நிதியத்துடன் உரிய உடன்படிக்கைகளுக்கு வந்த பின்னரே அது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அரச வருமானத்தையோ அல்லது மொத்தச் செலவையோ எந்த வகையிலும் மாற்றியமைக்க இயலாது என மேலும் குறிப்பிட்டுள்ளார்.