சமுர்த்தி வங்கி கடன் வசதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களுக்கு சலுகை அடிப்படையிலான கடன் வசதிகளை வழங்குவதற்காக 12.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவுகளை இன்று(12.11.2026) நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடன் வசதிகள்
இந்தத் திட்டத்தின் கீழ், சமுர்த்தி வங்கிகள் ஊடாக ஆண்டுக்கு 3 சதவீத வட்டி வீதத்தில் அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படவுள்ளது.

குழுக் கடன் அடிப்படையில் இந்தக் கடனுதவிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கிராமப்புறங்களில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், சமுர்த்தி வங்கிகள் வாயிலாக 5,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான கடன் திட்டமொன்றை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 4% என்ற சலுகை வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்கப்படும், மீதமுள்ள வட்டிச் செலவை அரசாங்கக் கருவூலம் ஏற்கும்.
இக்கடனைப் பெறுவதற்கு, தொழில்முனைவோர் அஸ்வெசும (Aswesuma) நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் குறைந்தது ஐந்து பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடியால் முடங்கியுள்ள ஈரான்... உடல் உறுப்புகளை விற்கும் நிலையில் மக்கள் News Lankasri
மின்னஞ்சலில் வந்த மிரட்டல்... ஐரோப்பிய நாடொன்றில் 6300 பாடசாலைகளில் மாணவர்கள் வெளியேற்றம் News Lankasri