சர்வதேச தரவரிசைகளில் இலங்கைக்கு முன்னேற்றம் - முக்கிய துறைகளில் முன்னேற்றம்
பல முக்கிய துறைகளில் இலங்கையின் சர்வதேச தர வரிசை முன்னேற்றம் கண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு உலகளாவிய தரவரிசைகள் மற்றும் மதிப்பீடுகளில் இந்த முன்னேற்றம் பிரதிபலிப்பதாகவும் நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடு எதிர்கொண்ட பல்வேறு பொருளாதார மற்றும் ஏனைய சவால்களுக்கு மத்தியிலும் இந்த முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான 'பிட்ச் ரேட்டிங்ஸ்' வழங்கும் இலங்கையின் இறையாண்மைக் கடன் தரப்படுத்தலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' அமைப்பின் ஊழல் தொடர்பான தரவரிசைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி விசேடமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்துறைகளில் நாடு முன்னேற்றம்
மேலும், , உலகளாவிய அமைதிச் சுட்டெண்ணில் இலங்கையின் நிலை முன்னேறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்வேறு துறைகளிலும் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கான சான்றாக இந்த வளர்ச்சிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் மிக வேகமாக முன்னேறி வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இலங்கை திகழ்வதாகவும், உலகின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயர் நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரமாக இலங்கை தனது நிலையை மேம்படுத்தியுள்ளதையும் அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகளின் போது ஏற்பட்ட சவால்களுக்கு மத்தியிலும் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தையே இவை பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் 1.40 மணியளவில் நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரையை ஆரம்பித்தார்.
இன்று முற்பகல் வரவு செலவுத் திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படும் இந்த 2027 வரவு செலவுத் திட்டம், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸ்: 6 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சூர்யாவின் சீன் படம் எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam