ரணில் முன்வைத்துள்ள திட்டம் : தீர்மானத்தை அறிவித்த மகிந்த
நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றேன்
தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
பொருளாதார ரீதியில் எம்மீது சுமத்தப்படும் சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கிறேன். நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் தான் பொருளாதார ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

எதிர்காலத்தை இலக்காக கொண்டு 2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டுக்காக எடுக்கப்படும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். வரவு - செலவுத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri