போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட இருவர் கைது!
திருகோணமலை கோமரன்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திகடுவ பகுதியில் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(26.1.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, பௌத்த பிக்கு வசம் இருந்து 1520 மில்லிகிராம் கஞ்சாவும், சிவில் பாதுகாப்பு படையினரின் வசம் இருந்து 540 கிராம் கஞ்சாவும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது
பௌத்த பிக்கு புலிகண்டி குளம் பகுதியில் உள்ள விகாரையில் வசித்து வருவதாகவும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி மதவாச்சி சிவில் பாதுகாப்பு படை திணைக்கள அலுவலகத்தில் கடமையாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா என்பவற்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam