அதிநவீன தொழில் நுட்ப தொடருந்து பயிற்சி மையம்
இரத்மலானை தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் அதி நவீன தொழில்நுட்பங்களுடனான தொடருந்து ஓட்டுனர் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (27.01.2026) நேரில் விஜயம் செய்து செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார்.
புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இந்த தொழில்நுட்ப மையம் புதிதாக நியமிக்கப்பட்ட தொடருந்து ஓட்டுநர்களுக்கு உடனடி பயிற்சி அளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
1.1 மில்லியன் யூரோ செலவில் கட்டப்பட்ட இந்த பயிற்சி மையம் 01, சிமுலேட்டர் கேபின் (simulator cabin), 08 பயிற்சி மேசை மற்றும் 06 கண்காணிப்பு வலையங்களை (observation desk) கொண்டுள்ளது.
இதில் தொடருந்துகளை நேரடியாக கையாளுதல்,தொடருந்து சிக்னல்களைப் பெறுதல், குறுக்கு வழிகளை எவ்வாறு கையாள்வது மற்றும் பயன்படுத்துவது போன்ற அதிகபட்ச அனுபவத்திற்கு 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த மையத்தில் பயிற்சியை மேற் கொள்வது சிறப்பம்சமாகும்.





பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam