தமிழர் தாயகத்தில் திடீரென வந்து அமர்ந்த மற்றுமொரு புத்தர் சிலை! (photos)
வவுனியா, செட்டிகுளத்தில் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (09.04.2023) பதிவாகியுள்ளது.
செட்டிகுளம் - மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய தொடருந்து நிலையம் முன்பாக உள்ள வீதியோரத்தில் சீமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலை
குறித்த பகுதிக்கு வந்த சில நபர்கள் கற்களை அடுக்கி புத்தர் சிலையை வைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மக்கள் பூர்வீகமாக இந்த பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், புத்தர் சிலை
வைக்கப்பட்ட இடத்திற்கு அருகில் செட்டிகுளம் முருகன் கோவில்
அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
