இஸ்லாமியர்கள் காணியில் புத்தர் சிலை! ராஜபக்சர்கள் விகாரைக்காக கொடுத்த காணி என்கின்றார் தேரர்(Video)
கடந்த 1ஆம் திகதி திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பொன்மலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருவான பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர் தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அங்கு அமளிதுமளி நிலவியுள்ளது.
ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில், அப்பகுதி மக்களை மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார். இதையடுத்து அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.
இந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளை உலகறியச்செய்து அவற்றுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முதன்மை ஊடகமான லங்காசிறி ஊடகத்தின் செய்திக்குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் செய்து களநிலவரங்களை அலசி ஆராய்ந்துள்ளது.
சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து புத்தர் சிலை வைக்க முற்பட்ட பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர் , பாதிக்கப்பட்ட மக்கள் , அம்மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அதே பகுதியில் உள்ள ஏனைய தேரர்கள் ஆகியோரிடம் நாம் பேசி அவர்களின் கருத்துக்களை பதிவு செய்துகொண்டோம்.
இப்பிரச்சினை தொடர்பான முழு விபரங்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,