இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டமைக்கு காரணம் இதுவே!: இராணுவத்தினரின் கருத்து - செய்திகளின் தொகுப்பு
கனவில் புத்தபெருமான் தோன்றி தனக்குச் சிலை வைத்து வணங்குமாறு கூறினார். அதனால்தான் சிலையை வைத்தோம் என்று நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுபடும் இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
நிலாவரை கிணற்றுக்கு அருகிலுள்ள அரச மரத்துக்கு கீழே திடீரென இரவோடு இரவாக புத்தர் சிலை அமைக்கப்பட்டமையால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விசாரணைகளை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர் செய்திகளை தொகுப்பு,
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam