தமிழர் பகுதியில் வலுக்கட்டாயமாக அமரும் புத்தர்: நாடாளுமன்றில் காட்டம் (video)
வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் மிக நீண்டகால யுத்தத்தை சந்தித்தவர்கள், அவர்களின் நிலங்கள் இன்றும் பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21.03.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையை புத்த விகாரை என பறிக்க முயற்சிக்கின்றார்கள்.
நில அபகரிப்பு
இந்நிலையில் நாவற்குழியில் சிங்கள மக்கள் ஒருவரைகூட காண கிடைக்காது ஆனால் தற்போது அங்கு ஒரு விகாரையை அமைத்து கடந்த வாரம் சவேந்திர சில்வா வருகை தந்து கோபுரம் வைக்கின்றார்.
அதேவேளை மயிலிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலங்களை அபகரித்து விகாரைகளை அமைக்கின்றனர்.
தமிழருடைய பகுதிகளான வெடுக்குநாரி மலை, குருந்தூர்மலை, உருத்திரபுரம் சிவன் கோவில், நிலாவரை நல்ல தண்ணி கிணறு போன்ற இடங்களில் வலுக்கட்டாயமாக புத்தர் சென்று அமருகின்றார்.
அந்த நிலங்கள் பறிக்கப்படுகின்றது. தொல்லியல் திணைக்களத்தினூடாக மிகப்பெரிய ஆக்கிரமிப்பு நடைபெறுகின்றது என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam