வவுனியா வெடுக்குநாரி மலையின் பௌத்த சின்னங்கள் "தமிழர்களுடையது" - இலங்கையின் நாடாளுமன்றில் உரிமைக்கோரல்
தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள். எனவே தமிழ் பௌத்தர்களின் அடையாளங்களே வடக்குகிழக்கில் பௌத்த அடையாளங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இதனை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் வவுனியா வெடுக்குநாரி மலையில் நிறுத்தப்பட்டுள்ள பூசைகளை மீண்டும் நடத்த அனுமதிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலாநாதன் இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் வழங்கிய தேசிய மரபுரிமைகள் துறை ராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, இலங்கையில் தமிழ் சிங்கள் முஸ்லிம்களின் மரபுரிமைகள் பாதுகாக்கப்படும என்று குறிப்பிட்டார்.
எனினும் வெடுக்குநாரி மலை விடயம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தீர்ப்பு வரும் வரை பொறுமைக் காக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam