உருத்திரபுரம் பகுதியில் ஒருவர் வெட்டிப்படுகொலை (Video)
கிளிநொச்சி - உருத்திரபும் பகுதியில் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி மரண வீடு ஒன்றில் இடம்பெற்ற கருத்து முரண்பாட்டையடுத்து இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் வாள்வெட்டில் முடிந்துள்ளது.
சிவநகர் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகசுந்தரம் யசோதரன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் ஒரு சந்தேகநபர் கிளிநொச்சி பொலிஸாரால்
நேற்று கைது செய்யப்பட்டு இன்றைய தினம் கிளிநொச்சி
மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு
கட்டளையிட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சந்தேகநபர்கள் ஏற்கனவே
கைது செய்யப்பட்டு 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
