கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம்

Nuwara Eliya
By Pradhusas Oct 03, 2024 07:38 PM GMT
Report
Courtesy: Aadhithya

நுவரெலியா - கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா - ஹெரோ கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நாவலர்புற லயன் குடியிருப்புகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் மிகவும் அச்சத்துடன் வாழ்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த லயன் குடியிருப்பு 16 லயன் அறைகளை கொண்டுள்ளது. அவ்வனைத்து வீடுகளிலும் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.

50க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வாழும் இவ்விடத்தில் வீட்டின் முன்புறம், உட்புறம் என பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பலமுறை தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தும் எவ்வித பதிலும், பலனும் கிட்டவில்லை.

ஹமாஸின் மூன்று உயர்மட்ட உறுப்பினர்கள் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஹமாஸின் மூன்று உயர்மட்ட உறுப்பினர்கள் தொடர்பில் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அடிக்கல் நாட்டல் 

மேலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது வீடுகள் ஹெரோ பகுதிக்கு வருவதாக கூறினர் பொய்யாகி போனது, பின்னர் கோட்டாபய ஆட்சியின் போதும் கனவாகியது.

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம் | Broken House Issue In Kotmale Hero Estate

பின்னர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காலத்தில் இ.தொ.காவினால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், ஹெரோ தோட்டத்தின் அண்டைய தோட்டமான பேர்லன்ஸ் தோட்டத்திற்கு நாட்டப்பட்டுள்ளது. 

அப்போதும் எங்கள் பகுதிக்கு வீடுகள் தருவதற்கு முன்வரவில்லை. ஆனால் தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறுவதற்கு எங்களின் வெடிப்புக்குள்ளான குடியிருப்பை இல்லாதொழித்து புதிய தனி வீடுகளை கட்டி தருவதாக கூறியே வாக்குகளை கேட்டு வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

24 மணித்தியாலங்களுக்குள் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி

பாரிய மண்சரிவு 

மேலும், இது தொடர்பில் அவர்கள் குறிப்பிடுகையில், "வீடுகள் விரிசல் விடுவது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஏனென்றால் ஒரு ஐந்தாறு வருடத்திற்கு முன்பு இந்த லயன் குடியிருப்புக்கு அருகில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டது.

இதன் அருகிலுள்ள பகுதிகளும் எதிர்காலத்தில் மண்சரிவு ஏற்படுமென அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சிலவேளை, அதற்கான அறிகுறியாக இருக்குமோ என சந்தேகம் எழுகின்றது.

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம் | Broken House Issue In Kotmale Hero Estate

மழைக்காலங்களில் பெரும்பாலும் அச்சத்துடனேயே இருக்கின்றோம். நிம்மதியாக உறங்கி எழுவதை கூட பயத்துடனே மேற்கொள்கின்றோம். எங்களுக்கு வேறு வீடு கட்டி செல்வதற்கான வசதி கிடையாது.

வறுமான பிரச்சினை பெரும் பிரச்சினையாக காணப்படுகின்றது. நாட்டில் காணப்படும் பொருளாதார பிரச்சினையில் வீடுகளை கட்டுவதற்கு பணப்பிரச்சினை கிடையாது. அதே சந்தர்ப்பத்தில் வீட்டு கடன் வாங்கி கட்டுவதற்கும் வாய்ப்பில்லாத நிலை காணப்படுகின்றது.

கொத்மலையில் வீடுகள் வெடிப்புக்குள்ளாவதால் மக்கள் சிரமம் | Broken House Issue In Kotmale Hero Estate

பெரும்பாலும் தேயிலையில் வரும் வருமானத்தை நம்பியே இருக்கும் நிலையில் அதில் வரும் வருமானத்தை கொண்டு பிள்ளைகளை படிக்க வைப்பதா, வீட்டு செலவு பொருட்களை வாங்குவதா, இல்லை இலட்ச கணக்கில் செலவு செய்து வீடு கட்டுவதா என ஒன்றும் விளங்கவில்லை.

எனவே, ஏதாவது பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் எங்களை அவலங்களை பார்த்து வீடுகளை கட்டுவதற்கு ஏதாவது ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென மலையக தலைமைகள் சரி தற்போதைய ஜனாதிபதி சரி முன்வர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர். 

இஸ்ரேலுக்காக போர்க்களமிறங்கும் மற்றுமொரு நேட்டோ நாடு

இஸ்ரேலுக்காக போர்க்களமிறங்கும் மற்றுமொரு நேட்டோ நாடு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US