இஸ்ரேலுக்காக போர்க்களமிறங்கும் மற்றுமொரு நேட்டோ நாடு
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக, அதன் நட்பு நாடுகள் களமிறங்க முடிவு செய்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா போர்க்கப்பல் ஒன்றை மத்தியதரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
அத்துடன், மற்றொரு கப்பலையும், கூடுதல் படைகளையும் அனுப்ப திட்டமிட்டு வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதரவு நடவடிக்கைகள்
அமெரிக்காவைத் தொடர்ந்து, பிரான்ஸ் நாடும் இஸ்ரேலுக்கு ஆதரவான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
ஏற்கனவே, போர்க்கப்பல் ஒன்றை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ள பிரான்ஸ், ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தற்போது கூடுதல் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஈரானுக்கு ஆதரவாக அதன் நட்பு நாடுகள் போர்க்களத்தில் இறங்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |