பிரித்தானியா பொதுத் தேர்தல் : அரச குடும்பம் எடுத்துள்ள முடிவு
பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் தங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தேர்தல் பரப்புரைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவது அல்லது திசை திருப்புவது போல் தோன்றலாம் என்ற காரணத்தாலையே அரண்மனை இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த அரசாங்கத்தை முடிவு செய்ய பிரித்தானியா எதிர்வரும் ஜூலை 4ம் திகதி தேர்தலுக்குச் செல்வதாக பிரதமர் ரிஷி அறிவித்தார்.

நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை
முன்னதாக பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னரை சந்தித்துள்ள பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தை கலைக்க கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், தற்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரச குடும்பத்தின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முடிவால் எவரேனும் பாதிக்கப்படுவதாக உணர்ந்தால், மன்னர் மன்னிப்புக் கோருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam