பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளது: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சாடல்
பிரித்தானியா பேரழிவின் விளிம்பில் உள்ளதாகக் எச்சரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் கட்டுப்பாடற்ற சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் அதிகப்படியான எரிபொருள் செலவினங்கள் குறித்து தனது கடும் கவலையை வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
மன்னர் சார்லஸ் மீது தாம் மிகுந்த மரியாதையும் நேசமும் வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பிரதமர் அண்டி பர்ன்ஹாம் தலைமையிலான பிரித்தானிய அரசாங்கம் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதக் குடியேற்றங்கள்
உலகளவில் இருந்து மக்கள் தங்குதடையின்றி நாட்டுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தத் தவறினால், பிரித்தானியா என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், காலநிலை மாற்றக் கொள்கைகள் காரணமாக பிரித்தானியாவில் ஆற்றல் செலவுகள் இயல்பான அளவை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இருப்பினும், சட்டவிரோத படகு வருகைகள் மற்றும் மனித கடத்தல் கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக பிரித்தானியாவுக்கான சட்டவிரோதக் குடியேற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாகப் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.