ஐ.நாவில் இலங்கை விடயத்தில் பிரித்தானியா திடீர் திருப்பம்! இறுக்கமடையும் மனித உரிமைகள்
ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வு இடம்பெற்று வரும் நிலையில் இம்முறை அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு விடயமாக இலங்கை அரசியல் மாறியுள்ளது, இதன்போது இலங்கை பல அழுத்தங்களை சர்வதேச சமூகத்திற்கு கொடுத்துள்ளது என பிரித்தானியாவில் உள்ள சிரேஷ்ட சட்டவாளர் அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவ் அழுத்தங்களையும் தாண்டி பிரித்தானியாவின் தலையீட்டினால் இம்முறை இலங்கைக்கு எதிரான பிரேரணை இராஜதந்திர ரீதியில் கடுமையாக அமைவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது உகந்த காலம் இல்லை என்று கூறியுள்ளதே தவிர அதனை முற்றாக நிராகரிக்கவிலலை அத்துடன் சர்வதேச புலன்விசாரணை இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். அது மட்டுமல்லாது இதனை முழுமையாக பிரித்தானிய அரசு முன் கொண்டு செல்லும்.
பிரித்தானியாவில் இடம்பெறும் அம்பிகையின் உணவுத் தவிர்ப்பு போராட்டமும் தற்போதைய மாற்றங்களில் தாக்கம் செலுத்தியுள்ளது அத்துடன் அறவழியில் தமிழ் இனம் போராடினால் பல மாற்றங்களை ஏற்படுத்தலாம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.