பிரித்தானியாவில் தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தல்
பிரித்தானியா- தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு வணக்க நிகழ்வு பேரெழுசிச்சியாக இடம்பெற்றுவருகிறது.
பிரித்தானியா லண்டன் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்" என்று முழங்கிய மாவீரன் தியாக தீபம் திலீபனின் 38வது வணக்க நிகழ்வுகள் பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
வணக்க நிகழ்வு
காந்தி தேசம் என்று பெருமை பேசிய பாரத தேசத்தின் பொய்முகத்தை களைந்தெறிந்து ஐந்து அம்சக்கோரிக்கையை முன்வைத்து 12 நாட்கள் உணவு நீர் தவிர்த்து தமிழீழ விடிவுக்காய் தன்னை ஈகம் செய்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்கு பிரித்தானிய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதே நேரம் தமிழீழ வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கரின் 24வது ஆண்டு நிகழ்வும் நினைவுகூரப்பட்டு வருகிறது.
நிகழ்வினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் ஆகிய அமைப்புகளினால் ஒருங்கிணைக்கபட்டு பிரித்தானிய கொடி தமிழீழ தேசியக்கொடி ஆகியவை ஏற்றப்பட்டு அடையாள உண்ணாவிரதப்போராட்டமும் இடமபெற்று வருகிறது.
















பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
