உண்ணா நோன்பிருந்து தியாக தீபம் திலீபனுக்கு பருத்தித்துறையில் அஞ்சலி!
ஈழத்தமிழினத்தின் விடுதலைக்காக தன்னையே உருக்கி பன்னிரு நாட்கள் துளி நீர் கூட அருந்தாது உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் திலீபனுக்கு அடையாள உண்ணா நோன்பிருந்து பருத்தித்துறையில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளாகிய பருத்தித்துறை மருதடி முருகன் கோவிலுக்கு முன்பாக உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதியில் இன்று(26) காலை 8.00 மணிக்கு அடையாள உண்ணாவிரத நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் உயிர்பிரிந்த 10.48 க்கு நிறைவுசெய்யப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
திலீபனுக்கு அஞ்சலி
மாவீரர் புரட்சி தம்பியின் தாயார் தவமணியினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து மாவீரர் பாவலனின் தந்தை பொன் சக்திவேல் மலர்மாலையினை அணிவித்தார். தொடர்ந்து மாலை அணிவிக்கப்படு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பருத்தித்துறை வர்த்தக சங்கத்தினால் வழங்கப்பட்ட பயன்தரு மரக்கன்றுகள் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஒழங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சர்வமத தலைவர்கள், பருத்தித்துறை நகரபிதா வி.டக்ளஸ் போல், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று அடையாள உண்ணா நோன்பிருந்து தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அக வணக்கம்
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று(26.09.2025) அவர் பிறந்து வாழ்ந்த ஊரெழுவில் இருந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தீவக நினைவேந்தல் குழுவின் ஊர்தி பவனிகள் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன
இந்நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீதியோரங்களில் நின்று அஞ்சலி
இதன் பின்னர் அவ்விடத்தில் இருந்து இரு ஊர்திகளும் யாழ்.பலாலி வீதியூடாக நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இதே வேளை அதே வழித்தடத்தில் அமைந்துள்ள விடுதலை போராட்டத்திற்காக தன் உயிரை தியாகம் செய்த பொன் சிவகுமாரின் யாழ்.உரும்பிராயில் அமைந்துள்ள உருவச் சிலைக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் யாழ் நல்லூர் நோக்கி பயணிக்கும் இரு ஊர்திகளுக்கும் மக்கள் வீதியோரங்களில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
இவ் ஊர்தி பவனியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், நடராஜர் காண்டீபன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுபபினர் கட்சி ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று(26.09.2025) வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்,
“எமது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் தன் உயிரை நீராகாரம் ஏனும் அருந்தாது ஆகுதியாக்கிய மகானுக்கு தமிழர் தேசம் அஞ்சலிக்கின்றது.
இன்றும் தியாக தீபம் திலிபன் எதற்காகப் போராடினாரோ அவரது போராட்டத்திற்கான காரணங்கள் தீர்க்கப்படாது அவ்வாறே கானப்படுகின்றன.
அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அடிப்படைகளில் எவ்வித மாற்றத்தினையும் செய்யவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி - தீபன்
திருகோணமலை சிவன் கோயிலடி
தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இடம்பெற்றுள்ளது.
இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்தனர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா,
“அகிம்சை வழியில் போராடிய தியாக தீபம் திலீபன் அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை துறந்தார்.
23 வயதில் மருத்துவ மாணவனாக இருந்த போது, அப்போதைய காலத்தில் சிங்கள பேரினவாத காலணித்துவர்களால் அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டது. இந்தநிலையில், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட போது அரசாங்கம் ஊர்காவல் படையினருக்கு ஆயுதங்களை வழங்கியிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்தி - ரொஷான்
பருத்தித்துறையில் நினைவேந்தல்
தியாகி திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள், பருத்தித்துறை மக்களால் பருத்தித்துறை தியாக தீபன் திலீபனின் நினைவாலயத்தில் காலை 8 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மாவீரர்களான புட்சித்தமிழின் பெற்றோர் பரஞ்ஜோதி தவமணியால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
செய்தி - எரிமலை
புதுக்குடியிருப்பு நகர்
தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றையதினம்(26.09.2025) காலை புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவு நாளானது இன்றையதினம் (26.09.2025) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் நடைபெற்றிருந்தது.
செய்தி - ஷான்
புதுக்குடியிருப்பு உடையார் கட்டு
திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒன்று உடையார் கட்டு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேச மக்கள் வர்த்தக சங்கத்தினரின் ஒத்துழைப்புடன் தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சமூக செயற்பாட்டாளர் தியாகு தலைமையில் இடம்பெற்றுள்ளது.
செய்தி - கீதன்
பொங்கு தமிழ் தூபி
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் தியாகி திலீபனின் 38வது நினைவு தினம் இன்று(26.09.2025) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வானது வவுனியாவில் உள்ள பொங்கு தமிழ் தூபி முன்பாக அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கொட்டகையில் இடம்பெற்றிருந்தது.
செய்தி - திலீபன்
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம்
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(26.09.2025) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டது.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னாரில் இடம் பெற்றது. இதன் போது அன்னாரின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த , தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 10.30 மணியளவில் மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
செய்தி - ஆசிக்
திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஒன்று உடையார் கட்டு பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், வெள்ளிக்கிழமை(26.09.2025) மட்டக்களப்பு மாவடிவேம்பு சிவானந்தா விளையாட்டுக்கழக மைதானத்தில் தாயக செயலணியின் அனுசரணையில், மாவடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பிரிநட் குணபாலனின் தலைமையில் நடைபெற்றது.
கொழும்பில் அஞ்சலி
தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர்தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர்தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு. வருகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று (26.09.2025) தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்பட்டது.
உருவ படத்திற்கு மலர் மாலை
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,மாவீரரரின் தாயொருவர் பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளை
இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கிளிநொச்சி பொதுச்சந்தை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உள்ளிட்ட பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த சிறீதரன்,
“போரின் இறுதிக்கட்டம் நடந்த காலப்பகுதியில் முக்கிய பதவியை வகித்த தற்போதைய ஜகாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அப்பொழுது நமது சகோதர உறவுகளுக்காக சிந்தாத கண்ணீரை தற்பொழுது காசாவில் இடம்பெறுகின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிந்துகின்றார்.
அப்படி இறக்க மனங்களை கொண்டவராக இருந்தால் ஏன் எமது உறவுகள் செத்து மடிந்த போது, தனது அனுதாபங்களையும் எந்தவித ஆதங்கங்களையும் தெரிவிக்கவில்லை” என கேள்வியெழுப்பியுள்ளார்.
செய்தி - தேவந்தன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
