நல்லிணக்கம் ஏற்படுமென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடு : கருணாகரம் ஜனா சாடல்

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe
By Navoj Jan 11, 2024 12:35 PM GMT
Report

ஆட்சியாளர்களின் அதிகாரப் பசியால் நம் நாட்டின் பாரம்பரியத்தை காலில் போட்டு மிதியாது அரசியலமைப்பினை முறையாக நடைமுறைப்படுத்துவதே நாட்டில் உண்மையும், நல்லிணக்கமும் ஐக்கியமும் ஏற்படுவதற்கு மார்க்கம் என நாடாளுமன்ற  உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

மேலும், ஆணைக்குழுச் சட்டம் மூலம் இவற்றினை ஏற்படுத்துவதென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடே எனவும் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.01.2024) உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

மேலும் தெரிவிக்கையில்,

பேருண்மை

சட்டமூலமொறினால் நாட்டில் உண்மை, இன நல்லிணக்கம், ஒற்றுமை ஏற்படும் என்ற “மாதனமுத்தா” சிந்தனையின் வெளிப்பாடே இச் சட்டமூலம் என நான் கருதுகின்றேன்.

மந்திரத்தால் மாங்காய் வீழ்த்துவது எவ்வளவு சாத்தியமோ அவ்வாறே இச் சட்டமூலத்தால் நம் நாட்டில் உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் ஏற்படும் என்று கருதும் செயற்பாடுமாகும். குறித்த சட்டமூலத்தின் முன்னுரையினை கவனமாக நோக்குவோமானால் ஒரு பேருண்மையொன்றினை நாம்புரிந்து கொள்ள முடியும்.

நல்லிணக்கம் ஏற்படுமென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடு : கருணாகரம் ஜனா சாடல் | Bringing Truth Harmony In Country Commission Jana

1978ஆம் ஆண்டு எம்மால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் உறுப்புரைகள் குறிப்பாக மக்களது அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதித்துறைச் சுதந்திரம், சுயாதீனத்தன்மை, சட்டத்தின் முன் யாவரும் சமமான தன்மைகள் இதுவரை முறையாக பேணப்படவில்லை என்ற உண்மையினை நாம் புரிந்து கொள்ளமுடியும்.

இச்சட்டமூலம் எமது அரசியலமைப்பின் உறுப்புரைகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறது.

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள்

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள்

சட்டத்தின் முன் சமம்

நமது நாட்டில் சட்டத்தின் முன் சமம் என்பது நடைமுறையிலுள்ளதா என்பதற்கு சிறிய உதாரணம், இன நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கும், மத முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கும், நில ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கும், காரணமானவர்கள் யார்? அண்மைக்காலமாக இத்தகைய நடவடிக்கைகளில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸார்,

எமது நாடு பாரம்பரிய பல்லினத்தன்மை கொண்ட நாடு. பல்லினத்தன்மையை மதித்த ஒரு நாடு. உலகத்தின் எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு அனைத்து மதக்குழுவினரும் ஒரே இடத்தில் தத்தமது மத வழிபாட்டினை அனுஷ்டிக்கும் பழம் பெருமை மிக்க பாரம்பரியம் கொண்டது எமது நாடு, சிவளொளிபாதம், கதிர்காமம் போன்ற புண்ணிய நிலங்கள் இதற்குத் தக்க உதாரணங்களாகும்.

நல்லிணக்கம் ஏற்படுமென்பது மந்திரத்தால் மாங்காய் விழுத்தும் செயற்பாடு : கருணாகரம் ஜனா சாடல் | Bringing Truth Harmony In Country Commission Jana

கடந்த வாரம் ஜனாதிபதி வடமாகாண விஜயத்தின் போது நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோமானால் பொருளாதார ரீதியாக நம் நாடு முன்னேற்றம் அடையும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இங்கு மதங்களுக்கிடையே நல்லிணக்கம் உருவாகத் தேவையில்லை. இனங்களுக்கிடையிலேயே நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும்.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள்

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மனித எலும்புகள்

காணி அபகரிப்பு

இன்றும் கூட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். இருபது முப்பது வருடங்களுக்கு மேலாக அரசியற் கைதிகளாக இருப்பவர்கள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.

காணி அபகரிப்பு வடக்கு கிழக்கிலே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மயிலத்தமடு மாதவணை போன்ற பிரதேசங்களிலே பண்ணையாளர்கள் அடித்து விரப்பட்டு பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்பட்டுள்ளதுடன், பண்ணையாளர்கள் மாடுகள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான நிலைமைகளில் எவ்வாறு இன நல்லிணக்கம் ஏற்படும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைத் தேர்தலை குறைந்தது ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் போதாவது வைத்தால் செலவுகளையும் குறைக்கலாம் இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தலாம் என்றும் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

அம்பாறை - மட்டக்களப்பில் தொடரும் கன மழை: நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள்

அம்பாறை - மட்டக்களப்பில் தொடரும் கன மழை: நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் முதலைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US