அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என பலர் தெரிவிக்கின்றனர் அவர் போட்டியிடுவார் என நான் தெரிவிக்கின்றேன்.
ரணிலுக்கே வெற்றி
ஐக்கிய தேசிய கட்சி தற்போது இந்த விடயத்தில் மௌனம் காக்கின்றது. உத்தியோகபூர்வமாக தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கிராமிய மட்டத்தில் கட்சி கவனம் செலுத்துகின்றது.

எதிர்கட்சி பிளவுபட்டுள்ளதால் ரணில் விக்ரமசிங்கவிற்கான வெற்றிவாய்ப்பு அதிகம். அவர் பிரச்சாரம் இல்லாததால் எதிர்கட்சி மாத்திரமே இலங்கையில் உள்ளது என தெரிவிப்பது சுலபம் ஆனால் ஆனால் எதிர்கட்சி இரண்டாக பிளவுபட்டால் ரணில் விக்ரமசிங்க வெற்றியை நோக்கி செல்வார்.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாசவும் எதிர்கட்சியின் வாக்குகளை பிளவுபடுத்தும் வாய்ப்புள்ளதால் எங்கள் வேட்பாளர் முன்னிலை பெறுவார் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam