பிரான்ஸிலிருந்து குடு அஞ்சுவை இலங்கைக்கு நாடு கடத்துவதை தடுக்க சட்டக் குழுவை நாடும் காதலி!
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அஞ்சுவை இலங்கைக்கு நாடு கடத்துவதை தடுக்க சட்டக் குழுவின் உதவியை அவரது காதலி எனக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டு யுவதி நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத் தகவலை புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடு அஞ்சு
குடு அஞ்சு எதிர்வரும் 4ஆம் திகதி பிரான்ஸ் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்போது அவர் சார்பாக இந்த சட்டத்தரணி குழு முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் நாட்டு யுவதி ஒருவருடன் சில காலமாக தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் குடு அஞ்சு, இலங்கையை சேர்ந்த திருமணமான தனது மனைவியை விவாகரத்துக் கோரியுள்ளமை தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த புதன்கிழமை (26.04.2023) பிரான்சில் வைத்து 'குடு அஞ்சு' இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பின் கீழ், பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்
இந்தநிலையில், பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் தற்போதுள்ள ஒப்பந்தம் தொடர்பில், குறிப்பாக குற்றவாளிகளை கையாள்வதில் சில விதி சிக்கல்கள் உள்ளன.
எனவே சிக்கல்கள் தீர்க்கப்படாதுபோனால், சம்பந்தப்பட்ட அமைச்சுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலே சந்தேகநபரை இலங்கைக்கு நாடு கடத்துவதை தடுக்க சட்டக் குழுவின் உதவியை அவரது காதலி எனக் கூறப்படும் பிரான்ஸ் நாட்டு யுவதி நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கிரிக்கெட் வீர் தனஞ்சய சில்வாவின் தந்தையான தெஹிவளை- கல்கிஸை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ரஞ்ஜன் டி சில்வாவை 2018 ஆம் ஆண்டு படுகொலைச் செய்தமை மற்றும் அங்குலானை பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டப்பட்டமை தொடர்பில் ‘ரத்மலானை குடு அஞ்சு’ வின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You may like this Video