இலங்கையில் தேடப்படும் சமிந்த சில்வா பிரான்ஸில் கைது!
பாதாள உலகக் குழுவின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'இரத்மலானே குடு அஞ்சு' என அழைக்கப்படும் சிங்கராகே சமிந்த சில்வா பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கைப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சர்வதேசப் பொலிஸாரால் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
சிவப்பு பிடியாணை
குறித்த நபர் இரத்மலானை கோணக்கோவில பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
'குடு அஞ்சு' பல குற்றச்செயல்கள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள்
கடத்தலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்தார்
குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் செலுத்தியுள்ளனர்.