பிரான்ஸில் கைது செய்யப்பட்ட சமிந்த சில்வா தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலை பெற நடவடிக்கை
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், குற்றக்குழுவின் உறுப்பினருமான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில் சட்டமா அதிபருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை பிரான்சில் வைத்து 'குடு அஞ்சு' கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு
சந்தேநபர் கைது செய்வதற்கான இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பின் கீழ் பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் தற்போதுள்ள ஒப்பந்தம் தொடர்பில் குறிப்பாக குற்றவாளிகளை கையாள்வதில் சில விதி சிக்கல்கள் உள்ளன.
எனவே சிக்கல்கள் தீர்க்கப்படாதுபோனால், சம்பந்தப்பட்ட அமைச்சுடன்
ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று தல்துவ குறிப்பிட்டுள்ளார்.