ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க
ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனரல் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு
2004 ஆம் ஆண்டு தான் நான் மஜிஸ்திரேட் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன்.2020 ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில் 2025 இல் இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இயக்குநர் ஜெனராக நியமனம் பெற்றேன்.
நான் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டால் நான் நீதிபதியாக செயற்பட தகுதியற்றவன்.
ஆதலால் 20 வருடங்களாக தந்தன குணதிலக்க யாருக்கும் சொல்லாத இரகசியமாக இருந்தால், இவர் நீதிபதியாக இருக்க தகுதியில்லையென அவர் நீதித்துறை ஆணைக்குழுவுக்கும் தெரிவித்திருக்கலாம்ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
ஆதலால் அவர் சொல்லும் வகையில் நான் எவ்வித கமிட்டியிலும் இருக்கவில்லை.இதை நான் முற்றாக நிராகரிக்கின்றேன் என்றார்.
இவ்வளவு நாள் சொல்லாமல் இப்போ ஏன் சொல்லுகிறார் என்றார் அதன் நோக்கம் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கையீனமாக்குவதாகும்.

மன்னார் காற்றாலை போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி! பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்
பொது மக்களின் கவனம்
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறித்து தவறான செய்திகளைப் பரப்பி, அதன் செயல்பாடுகளை அவதூறு செய்பவர்களுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஊடக அறிக்கை ஒன்றையும் இன்று (02) நடைபெற்ற மாநாட்டில் வெளியிட்டார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இதுபோன்ற நடவடிக்கைகள் ஆணையத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், ஆணைகுழுவால் நடத்தப்படும் முக்கிய விசாரணைகளிலிருந்து பொது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாகவும், ஆணைக்குழு செயல்பாடுகளின் உண்மைத் தன்மை குறித்த மாற்றுக் கருத்தை உருவாக்குவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டம், 2023 இன் கீழ் ஆணைகுழுவின் அதிகாரங்களை சுதந்திரமாகவும் பாரபட்சமின்றியும் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அதற்கு சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.





விமானத்தில் கலாட்டா செய்த பிரித்தானியரை காதைப் பிடித்து இழுத்துச் சென்ற பிரான்ஸ் பொலிசார்: ஒரு வைரல் வீடியோ News Lankasri
