சபாநாயகர் மற்றும் பிமல் செய்த பெரும் தவறு: தயாசிறி குற்றச்சாட்டு
இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இருவரும் நாடாளுமன்ற கௌரவத்துக்கு களங்கம் விளைவித்துள்ளதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்ற நடவடிக்கையின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் நியமனத்தில் மூவரின் பெயர்களை பரிந்துரைக்காக ஜனாதிபதிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவர்கள் கையொப்பம் வைக்கும் போது ஓய்வுபெற்ற நீதிபதிகள் தவிர அரசியல் நியமனங்கள் பெற்றுக்கொண்டவர்கள் அல்ல என பிமல் ரத்நாயக்க அரசியலமைப்பு சபைக்கு அறிவித்திருந்தார்.
சத்திய கடதாசி மூலம் எதிர்ப்பு
அதையடுத்து அரசியலமைப்பு சபையிலுள்ள உறுப்பினரான பேராசிரியர் தினேசா சமரரத்தின தனது வாக்கை ரங்க திசாநாயக்கவுக்கு வழங்கினார். அதன் பின்னர் ஆளுநர்கள் நியமனத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் 2024.09.27 தினத்தன்று வெளியிடப்பட்டிருந்தது.
ரங்க திசாநாயக்க ஆளுநராக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பின்னரே தனது பெயர் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் சபாநாயகருக்கு சத்திய கடதாசி மூலம் தனது எதிர்ப்பை தெளிவுபடுத்தியிருந்தார்.
அதனால் நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் சட்டங்களின் படி அரசியலமைப்பு சபைக்கு பொய்யான தகவல்களை வழங்கிய பிமல் ரத்நாயக்க பெரும் குற்றமிழைத்துள்ளமை தெளிவாகின்றது.
அத்தோடு சபாநாயகரும் அதே குற்றத்தை செய்துள்ளதால் நாடாளுமன்றத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளமையால் அது தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு விளக்குமாறு தயாசிறி கேட்டுக்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri