திட்டமிட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர்: பொதுமக்கள் கண்டனம் (Photos)
மன்னார்- தலைமன்னார் பகுதியில் நிவாரண பொருட்களை பெற தகுதியான குடும்பம் ஒன்றிற்கு நிவாரண பொருள் வழங்காத கிராம சேவகரை திட்டமிட்டு இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்ய வைத்த சம்பவம் ஒன்று மன்னார் தலைமன்னார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னார்- மேற்கு கிராமசேகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் கிராம சேவகர் ஒருவர் நிவாரண பொருள் பெறுவதற்கு இலஞ்சம் கோரியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கடந்த வியாழக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
நிவாரணம் வழங்கும் செயற்பாடு
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, “ இந்திய அரசினால் பின் தங்கிய குடும்பங்களுக்கு நிவாரணம் பொருள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது நிவாரணம் பெறுவதற்கான நிபந்தனைகளுக்கு உட்படாத குடும்பங்களுக்கு குறித்த கிராம சேவகரினால் நிவாரணம் பொருள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் நிவாரண பொருள் கிடைக்காத குடும்பம் ஒன்று கிராம சேவகரில் மேசையின் கீழ் இருந்த பணத்தை எடுத்து அது இலஞ்சமாக பெற்ற பணம் எனக்கூறி, கிராமசேவகரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைது செய்துள்ளது என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
அப்பகுதி மக்கள், கிராம சேவகரை கைது செய்து கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டு நேற்று இரவு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் பிணை வழங்க முடியாத காரணத்தினால் கொழும்பு நீதிமன்றத்தில் 24 திகதி கிராம சேவகரை முன்னிலைபடுத்துமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கண்டனம்
இதனை தொடர்ந்து குறித்த குடும்பம் இவ்வாறு உண்மைக்கு புறம்பான விடயங்களை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிராம சேவகரை இலஞ்சம் வேண்டியதாக கோரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து கைது செய்ய காரணமாக இருந்த பெண்ணின் வீட்டை நேற்றைய தினம் மாலை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கி சேதப்படுத்தியமை” குறிப்பிடத்தக்கது.








உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
