பொதுமக்களுக்கான முக்கிய தகவல்! இன்று முதல் நடைமுறை
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இவ்வாறு விநியோகம் செய்யப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்துதல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிவாரண விலையில் அரிசி
இதற்கமைய சதொச, கூட்டுறவு நிலையங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் ஊடாக நிவாரண விலையில் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு மற்றும் வெள்ளை கெக்குலு அரிசி ஒரு கிலோகிராம் 197 ரூபாவுக்கும், நாடு ஒரு கிலோ 199 ரூபாவுக்கும், சம்பா 205 ரூபாவுக்கும், கீரி சம்பா 215 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும்.
நுகர்வோருக்கு நிவாரண விலையில் அரிசியை வழங்கும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 55 நிமிடங்கள் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
