பிரித்தானியாவில் மிகவும் மோசமாக செயற்பட்ட தமிழர் ஒருவர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கம்
பிரித்தானியாவில் தகாத முறையில் செயற்பட்ட தமிழர் ஒருவர் அரச சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் 24 மாத சிறைத்தண்டனையும் நார்விச் கிரவுன் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
12 வயதான சிறுமி ஒருவரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடி்பபடையில் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பணி நீக்கம்
Ipswich பகுதியிலுள்ள தேசிய சுகாதார சேவையில் ரேடியோகிராஃபராக (radiographer) பணியாற்றிய 42 வயதான வினோத் ராமச்சந்திரன் என்பவரே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக குறித்த சிறுமியுடன் தகாத முறையில் உரையாடல்களை மேற்கொண்டமை தொடர்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.
இருவரும் சந்திக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்று தனது விருப்பதையும் மிக மோசமாக விபரித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள்
மேலும் பொலிசாரிடம் சொல்ல வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமச்சந்திரன் நிகழ்நிலையில் தகாத படங்களை எப்படி பார்ப்பது என்பது தொடர்பிலும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் பாலியல் ரீதியிலான படங்களையும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பல்வேறு துஷ்பிரயோக நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam