மார்பகப் புற்றுநோய் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் தினமும் சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் சம்பவங்கள் பதிவாகின்றன, அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பெண்கள் இந்த நோயால் இறக்கின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும, இன்று (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.
மார்பகப் புற்றுநோய்
2022 ஆம் ஆண்டில், நாட்டில் மொத்தம் 19,457 பெண் புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அதில் 5,477 பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மொத்த பெண் புற்றுநோயாளர்களில் 28% என்றும் மருத்துவர் தெரிவித்தார்.
ஆரம்பகால கண்டறிதல் வெற்றிகரமான சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்றாலும், சுமார் 30 சதவீதமானோருக்கு தாமதமான கட்டங்களில் நோய் கண்டறியப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் ஆண்டுதோறும் நிகழும் 15,245 புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் 798 மார்பகப் புற்றுநோயால் ஏற்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் ஒரு பகுதியாக ஒக்டோபர் 11 ஆம் திகதி ஹெவ்லொக் நகரில் ஒரு விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

திருமணத்தில் கடைசி நேரத்தில் வரப்போகும் பெரிய ட்விஸ்ட்.. எதிர்நீச்சல் தொடர்கிறது லேட்டஸ்ட் ப்ரோமோ Cineulagam
