மலையக இளைஞர்களுக்கான தடைகள் உடைந்தன : அம்பிகா நம்பிக்கை
இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதியான அம்பிகா சாமுவேல், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள இளைஞர்கள் அரசியலில் தீவிர பங்கு வகிக்கும் திறன் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெருந்தோட்ட சமூகத்தின் பிரதான அரசியல் கட்சியொன்றின் மூலம் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் பெண்களில் ஒருவரான அம்பிகா சாமுவேல், தமது அரசியல் பிரவேசம், வெறும் தனிப்பட்ட சாதனையல்ல, குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு படிக்கல் என வலியுறுத்தியுள்ளார்.
காலாவதியான கட்டமைப்பு
பெருந்தோட்டத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள், காலாவதியான கட்டமைப்பிற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பெருந்தோட்ட சமூகத்தில் இருந்து அரசியலுக்கு வரும் தம்மை, தமது சமூகத்தின் சகோதர சகோதரிகள் நிச்சயம் பின்பற்றுவார்கள்.
எனினும் மகத்தான திறமை மற்றும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆசை கொண்ட இளைஞர்கள். நீண்ட காலமாக, சில வரம்புகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக அம்பிகா குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமைத்துவ அலை
ஆனால் தற்போது அந்த தடைகள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே மலையகத்தில் இருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் ஒரு புதிய தலைமைத்துவ அலை உருவாகும் என்று எதிர்பார்க்கலாம் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெண்கள் பெரும்பாலும் சமையலறையில் மட்டுப்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்களில் பலர் அதிக திறன் கொண்டவர்கள். அவர்கள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், அரசியலில் தாம் எடுத்துள்ள முதல் அடியின் மூலம், நாடாளுமன்றத்திலும் அதற்கு அப்பாலும் அதிகமான பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு உயர்வதை சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்க முடியும் என்று அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |