நிறைவுக்கு வந்துள்ள சட்டத்தரணிகளின் பணிப்புறக்கணிப்பு: கறுப்பு முகக்கவசம் எதிர்ப்பு
முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட காலவரையறையின்றிய தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
எனினும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கறுப்பு முகக்கவசம் அணிந்தவாறு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை
முல்லைத்தீவு குருந்துார் மலை வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக அவர் தனது பதவியிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தை தொடர்ந்து நீதிபதிக்கு நீதிவேண்டி தாயகத்தின் பல பகுதிகளிலும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், நீதித்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தினால் 02 ஆம் திகதி காலவரையறையின்றிய தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இஸ்ரேல் - ஹமாஸ் கொடூர தாக்குதல் : நிராகரிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
இவ்வாறான நிலையில், நேற்றைய தினம் நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகளினால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இன்று முதல் தமது பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை கைவிட்டு, அவர்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளனர்.
தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், கறுப்பு முகக்கவசம் அணிந்தவாறு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |