இலங்கையில் நீதி மரணித்து விட்டது: போராட்டக்களத்தில் ரவிகரன் விசனம்
இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி முல்லைத்தீவு இளைஞர்களால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(09.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடரந்தும் அவர் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜாவுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு நீதி கோரி தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தல்
கொழும்பில் நீதிமற்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
இளைஞர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது பல இடங்களில் பல கிராமங்களில் சென்று புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்கள்.
இதனால் அச்சத்தால் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இலங்கையில் நீதி இறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
சாக்குப்போக்கு சொல்லாமல் உண்மையான நீதியினை வழங்கவேண்டும் என்றால் சரவணராஜாவின்
இந்த நடவடிக்கைக்கு சரியான முறையில் இலங்கையில் உள்ள பக்கச்சார்பு
இல்லாதவர்கள் ஒன்றிணைந்து நியாயமான தீர்வு திட்டத்தினை தரவேண்டும் என்றும்
அவர் தெரிவித்துள்ளார்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam