மட்டக்களப்பில் கோயிலுக்கு செல்ல அனுமதிக்காததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு
மட்டக்களப்பில் தாந்தாமலை கோயிலுக்கு செல்வதற்கு பெற்றோர் அனுமதி வழங்காமையால் 12 வயது சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள சாளம்பங்கேணி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(08) மாலை இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணியளவில் தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
இதன்போது, சனிக்கிழமை நடைபெறும் தீர்த்த உற்சவத்துக்கு செல்லலாம் என சிறுவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மனமுடைந்த சிறுவன் வீட்டின் அறையில் வைத்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



