சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video)

Sri Lanka Police Ampara Crime Death
By Farook Sihan Dec 06, 2023 09:18 AM GMT
Report

புதிய இணைப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மாணவன் இன்று (6) மர்மமாக மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட மத்ரஸா பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீனின் விசாரணைக்குப் பின் குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பெற்றோர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....! இன்று 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள நிலைமை

நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....! இன்று 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள நிலைமை

புலன் விசாரணை

இதே வேளை, நேற்றிரவு கைதான குர்ஆன் மத்ரஸா நிர்வாகி பாதுகாப்பாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் புலன்விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

அத்துடன், குடும்பத்தில் மூத்தவரனான எனது மகன் கடந்த அக்டோபர் மாதம் 14ம் திகதி குறித்த மத்ரஸாவில் இணைந்ததாகவும் அவருக்கு மாதமொருமுறை 10 ஆயிரம் செலுத்தியதாகவும் இணைப்புக்கட்டணமாக ருபா 25 ஆயிரம் செலுத்தியதாகவும் 2 மாதம் கூட இன்னும் ஆகவில்லை.

மௌலவி தொலைபேசியூடாக மகனின் சடலத்தைக் காண்பதாகவும் கண்ணீர் மல்க சிறுவனின் தந்தையார் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

முதலாம் இணைப்பு

சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் மதர்ஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று (05.11.2023) செவ்வாய்க்கிழமை இரவு மதரஸாவை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எம்.முஷாரப்என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி அம்பலம்: நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் மோசடி அம்பலம்: நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு

பொலிஸ் முறைப்பாடுகள் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மதரஸாவில் தங்கியிருந்து குர்ஆன் கல்விகற்று வந்த மாணவன் சம்பவதினமான நேற்று மாலை துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

இந்த நிலையில் அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் எனவும் மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே அதிகளவிலான பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு கலகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்ததுடன் நிர்வாகியை கைது செய்துள்ளனர்.

நியாயமான விசாரணை

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

அத்துடன் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை மதராஸாவின் மாண்பை பேணும் விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும், நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றிருந்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

சாய்ந்தமருது மதரஸாவில் மர்மமாக உயிரிழந்த மாணவன்: சிறப்பு தடயவியல் பொலிஸார் தீவிர விசாரணை (Video) | Boy Death In Amparai

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்

இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்

இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US