ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது! அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்
பொதுபல சேனா பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் ஒரு தடவை பொது மன்னிப்பு வழங்க முடியாது என்று அமைச்சர் லால்காந்த திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட நடைபயணம் தொடர்பாக கருத்து வெளியிடும்போது, விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த மேற்கண்டவாறு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
லால் காந்த திட்டவட்டம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவும் அரசாங்கமும் மக்களிடமிருந்து பெற்ற ஆணைக்கு எதிராகச் செயற்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அமைச்சர், நடைபயணத்தில் பங்கேற்ற பௌத்த பிக்குகள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது மக்கள் ஆணைக்கு முரணானதாக அமையும் என்பதே தனது நிலைப்பாடாகும் என்றும் அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.