மயக்கமடைந்த நிலையில் உதவியாளர்களால் மீட்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை
கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, மகிந்தவை சாதாரண அறைக்கு மாற்றுவதற்கு வைத்தியர்கள் தயாராகி வருகின்றனர்.
உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இன்மை காரணமாக மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மகிந்தவின் உடல்நிலை
ஆரம்பத்தில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் , பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு மகிந்த சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலை சீரான நிலைக்கு திரும்பியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரண அறைக்கு மாற்றும் அளவுக்கு மகிந்த உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்ட போதும், தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மகிந்தவிற்கு ஏற்பட்ட இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமை போன்ற பிரச்சினையே ஆரம்பத்தில் இருந்ததாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மகிந்தவின் பாதுகாவலர்கள் அன்றைய நாளுக்குரிய பத்திரிகையுடன் மகிந்தவின் அறைக்கு சென்ற போது அவரது மயக்கமடைந்து சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டுள்ளார்.
காலை 10 மணியளவில் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு அவரது உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
மகிந்த முதன்முதலில் MICU பிரிவில், அதாவது மருத்துவ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பொதுவாக அங்கு அனுமதிக்கப்படுவது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்படாத எனினும் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளாகும்.