கொழும்பில் பல்கலைக்கழக மாணவியின் முறையற்ற புகைப்படங்களை அம்பலப்படுத்திய நபருக்கு நேர்ந்த கதி
சீன பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயிலும் இலங்கை மருத்துவ மாணவியின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை டெலிகிராம் குழுவில் பரப்பிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க போதரகம நேற்று உத்தரவிட்டுள்ளார்.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ
மஹரகம, நாவின்ன பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவின் கணினி பிரிவுக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாட்டாளரின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சூட்சுமமாக பெற்ற சந்தேகநபர், அதனை டெலிகிராம் குழுவில் பரப்பியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
விளக்க மறியல்
குறித்த டெலிகிராம் குழுவில் சுமார் 8,000 உறுப்பினர்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, தலைமை நீதவான், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam