எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம் அதிகரிக்கும் கட்டணம்! வெளியானது விசேட வர்த்தமானி
எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் தாவரவியல் பூங்காவுக்கான நுழைவுக்கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையர்களுக்கான கட்டணம்
அதன்படி, இலங்கையர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு (அடையாள அட்டையைக் காண்பித்தல் வேண்டும்) 50 ரூபாவும், வளர்ந்தோர் (60 வயது வரை) மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 200 ரூபாவும், 12 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் மற்றும் பாடசாலை சீருடையில் வரும் மாணவர்களுக்கு 30 ரூபாவும் வசூலிக்கப்படவுள்ளது.
முன்பு பெரியவர்களுக்கு 100 ரூபாவும், சிறுவர்களுக்கு 20 ரூபாவும் கட்டணம் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டவர்களுக்கான கட்டணம்
வெளிநாட்டவர்களில் வளர்ந்தோர் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு 3000 ரூபாவும், 12 வயதிற்கு குறைந்த பிள்ளைகளுக்கு 1500 ரூபாவும், பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு (அனை உறுதிப்படுத்த அடையாள அட்டை அல்லது ஏற்கத்தக்க ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்) 2000 ரூபாவும் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
