ஐரோப்பிய சம்பியன் லீக் இறுதி ஆட்டத்தில் பொருசியா - ரியல் மட்ரிட் பலபரீட்சை
ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன் லீக் கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரியல் மட்ரிட் மற்றும் பொருசியா டோர்ட்மன் ஆகிய கழகங்கள் போட்டியிடவுள்ளன.
32 அணிகள் பங்கு பற்றிய இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த கழகமான பொருசியா டோர்ட்மன் ஸ்பெயினின் ரியல் மட்ரிட் உடன் இறுதி ஆட்டத்தில் மோதுவது இதுவே முதல்முறையாகும்.
ஸ்பானிய லீக் பட்டத்தை வென்ற ரியல் மட்ரிட் அணி தற்போது சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை இலக்கு வைத்துள்ளது.
இறுதி ஆட்டம்
கிண்ணத்தை ரியல் மட்ரிட் வென்றால் ஸ்பானிய லீக்கையும் சாம்பியன்ஸ் லீக்கையும் ஐந்தாவது முறையாக ஒரே பருவத்தில் கைப்பற்றும் அணி என்ற பெருமையை பெற்றுக்கொள்ளும்.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெம்ப்லி விளையாட்டு அரங்கில் நாளை அந்நாட்டு நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடந்த அரையிறுதியின் 2ஆவது சுற்றின் கடைசி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் மற்றும் ரியல் மட்ரிட் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என பின்தங்கியிருந்த நிலையில் 88', 90+1' ஆகிய கடைசி நிமிடங்களில் பெற்றுக்கொண்ட கோல்களால் ரியல் மட்ரிட் வெற்றியை பதிவுசெய்திருந்தது.
இந்நிலையில் அரையிறுதியின் முதல் ஆட்டாமல் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்த நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ரியல் மட்ரிட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |