திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் பங்கேற்பு
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ சீர்காழி கலாநிதி சிவசிதம்பரம் ஆகியோர் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த சிவராத்திரி நிகழ்வானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் நேற்று(06.03.2024) இடம்பெற்றுள்ளது.
சிவராத்திரி நிகழ்வு
இதன்போது போரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளாரின் தெய்வீக சொற்பொழிவும், கலாநிதி சீர்காழி சிவசிதம்பரத்தின் தெய்வீக கானங்களும் இடம்பெற்றுள்ளது.

மேலும், கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02 ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam